தமிழ்நாடு

tamil nadu

கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காகப் புதியதாக 25 ஆளில்லா விமானம்!

By

Published : Apr 8, 2020, 6:10 PM IST

சென்னை: கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு பணிகளுக்கு 5 கோடி ரூபாய் செலவில் 25 புதிய ஆளில்லா விமானங்களைத் தயாரிப்பதற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

drone
drone

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபடுத்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் கண்டுப்பிடித்த ஆளில்லா விமானங்கள் ஏற்கனவே பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த விமானங்களை மாநிலப் பேரிடர் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் உள்ள வானூர்தி துறை தயாரித்த 6 ஆளில்லா விமானங்கள் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

புதிய ஆளில்லா விமானம்

ஆனால் போதிய எண்ணிக்கையில் ஆளில்லா விமானங்கள் இல்லாத நிலையில், இதுபோன்ற சேவையைச் சமாளிப்பதற்குக் கூடுதலாக 25 புதிய ஆளில்லா விமானங்களைத் தயாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில பேரிடர் நிர்வாகத்துறை சார்பில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தத் தொகை மூலம் 25 ஆளில்லா விமானங்கள் விரைவில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தயாரிக்கப்பட உள்ளன. இதனை பயன்படுத்தி, கிருமி நாசினி தெளித்தல், ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்தல் போன்றப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details