தமிழ்நாடு

tamil nadu

'ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம்' - தவான் பெருமிதம்!

By

Published : Feb 5, 2019, 10:55 PM IST

ஹைதராபாத்: "இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம்" என, இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

நன்றி:டுவிட்டர்

இதுகுறித்து தவான் கூறுகையில்,

"இளம் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடிக்கூடியவர். குறுகிய நேரத்தில், ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை உள்ளதால், இவர் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம். நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தால் அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்" என தெரிவித்தார்.

இந்திய அணியில் தோனிக்கு அடுத்தப்படியாக, ரிஷப் பண்ட் தான் நம்பிக்கை தரும் விக்கெட்கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விளங்குகிறார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் சதம் விளாசி சாதனைப்படைத்தார். இதனால், 2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த இளம் வீரருக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.

21 வயதான இவர், இதுவரை இந்திய அணிக்காக 10 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 157 ரன்களை எடுத்துள்ளார். வெலிங்டனில் நாளை நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இவர் இந்திய அணிக்காக விளையாடுவார் எனவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details