சென்னை: டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுடனான இறுதிப்போட்டியில் வென்ற இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதனை தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜூலை 6ஆம் தேதி ஹராரேவில் தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 7, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மற்ற நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற உள்ளன.
இத்தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட அணியின் மூத்த வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட இளம் வீரர்களுடன் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த தொடரில் முதல் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சாய் சுதர்சன் 2021ல் தமிழ்நாடு அணிக்காகத் தனது முதல் விஜய் ஹசாரே போட்டியில் அறிமுகமானார். பின்பு தனது முதல் டி20 ஆட்டத்தை தமிழ்நாடு அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் விளையாடினார்
இதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் நடப்பு சீசன் மற்றும் அதற்கு முந்தைய சீசன்களில் குஜராத் அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பினை அளித்து வந்தார். இவர் மொத்தம் 25 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 6 அரைசதம், 1 சதம் உட்பட மொத்தம் 1034 ரன்கள் குவித்துள்ளார்.
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) July 2, 2024
Sai Sudharsan, Jitesh Sharma and Harshit Rana added to India’s squad for first two T20Is against Zimbabwe.
Full Details 🔽 #TeamIndia | #ZIMvINDhttps://t.co/ezEefD23D3
முதல் 2 டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விபரம்: சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன், ரிங்கு சிங், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ராணா
இதையும் படிங்க: இந்தியாவின் இளம் படையை எதிர்கொள்ள.. சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி!