தமிழ்நாடு

tamil nadu

ஓய்விலும் சேட்டைக்கு ஓய்வளிக்காத சாஹல் - இந்த முறை நாகினி டான்ஸ்

By

Published : Feb 25, 2020, 9:22 PM IST

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், நடிகைகளுடன் ‘நாகினி டான்ஸ்’ ஆடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

yuzvendra-chahal-dances-hilariously-with-two-girls-for-tiktok-video
yuzvendra-chahal-dances-hilariously-with-two-girls-for-tiktok-video

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதற்கிடையில் இந்திய ஒருநாள், டி20 அணிகளில் இடம்பெற்றிருந்த யுஸ்வேந்திர சாஹலுக்கு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் நாடு திரும்பினார்.

இந்நிலையில் நாடு திரும்பிய சாஹல், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாலிவுட் நடிகையான ரமீத் சாந்துடன் நடனமாடிய காணொலியை "டிக் டாக்" செயலில் கடந்தவாரம் பதிவேற்றம் செய்து, நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானார்.

இதனையடுத்து இந்த முறை நடிகை ரமீத் சாந்து, அவரது தோழியுடன் சாஹல் ‘நாகினி டான்ஸ்’ எனப்படும் பாம்பு நடனத்தை ஆடி, அதனை தனது சமூக வலைதளங்களிலும், டிக் டாக் செயலியிலும் பதிவேற்றியுள்ளார்.

நடிகைகளுடன் ’நாகினி டான்ஸ்’ ஆடிய சாஹல்

இந்த காணொலியை கண்ட ரசிகர்கள் அவரது சமூகவலைதள பக்கத்தில் கேலியான கருத்துகளை பகிர்ந்து, அந்த காணொலியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் சாஹல் இந்திய அணியில் இருக்கும் போதும் ‘சாஹல் டிவி’ என்ற பெயரில் அவ்வபோது தனது சேட்டைகளை காணொலியாக படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

தற்போது இரு மாடலிங் நடிகைகளோடு சாஹல் ‘நாகினி டான்ஸ்’ ஆடியிருப்பது அவரின் குரும்புத்தனம் பற்றி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: சச்சின் மாதிரி எனக்கு டார்ச்சர் கொடுத்த பவுலரே இல்லை - இன்சமாம்-உல்-ஹக்!

ABOUT THE AUTHOR

...view details