தமிழ்நாடு

tamil nadu

கோவிட்-19: ஐந்து மில்லியனை நிதியுதவியாக வழங்கிய பிசிபி!

By

Published : Mar 26, 2020, 7:15 PM IST

பாகிஸ்தானில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐந்து மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்யை வழங்கியுள்ளது.

Pak cricketers to donate PKR 5mn to COVID-19 relief fund
Pak cricketers to donate PKR 5mn to COVID-19 relief fund

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் நான்கரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 21ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பொதுவெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாகிஸ்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், எட்டு பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதையடுத்து, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களை காப்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அலுவலர்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஐந்து மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்யை நிதியுதவியாக அரசின் அவசர காலநிதியாக வழங்கியுள்ளது.

இது குறித்து பிசிபி தலைவர் இஷான் மணி கூறுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனைத்து சூழல்களிலும் நம் மக்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலையை போக்க நாம் முன்வருவோம். மேலும், பிசிபி சார்பாக நம் நாட்டு மக்கள் அனைவரும் தங்களையும், தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து இப்பெருந்தொற்றை தோற்கடிப்போம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:குறுகிய கால ஐபிஎல் தொடர் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்: பட்லர்!

ABOUT THE AUTHOR

...view details