ஹராரே: சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (ஜூலை.6) நடைபெறுகிறது.
1ST T20I. India won the toss and Elected to Field. https://t.co/r08h7yglxm #ZIMvIND
— BCCI (@BCCI) July 6, 2024
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். அண்மையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது.
அதைத் தொடர்ந்து இந்திய அணியின் சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். மேலும் உலகக் கோப்பையில் விளையாடிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளதால், ஜிம்பாப்வேக்கு சுப்மான் கில் தலைமையிலான இளம் படை விரைந்து உள்ளது.
இளம் படையாக இருந்தாலும் ஜிம்பாப்வேவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கக் கூடிய வகையில் இந்திய வீரர்கள் திறமை வாய்ந்தவர்கள். அதனால் ஜிம்பாப்வே வீரர்களுக்கு இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கடும் நெருக்கடி கொடுக்கும். மறுமுனையில் ஜிம்பாப்வே அணி சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் நிரம்பிய கலவையாக காணப்படுகிறது.
சிக்கந்தர் ராசா தலைமையில் களமிறங்கும் ஜிம்பாப்வே அணி நிச்சயம் இந்திய வீரர்களும் கடும் போட்டி அளிக்க முயற்சிப்பார்கள். வெற்றிக்காக இரு நாட்டு வீரர்களும் கடுமையாக மோதிக் கொள்வார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் விறுவிறுபுக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரம் புயலால் பர்படாசில் சிக்கிக் கொண்டு இந்திய அணி தாயகம் திரும்ப கால தாமதம் ஆனதால் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
🚨 Toss and Team Update 🚨#TeamIndia elect to field in the 1st T20I
— BCCI (@BCCI) July 6, 2024
Abhishek Sharma & Riyan Parag are all set to make their international Debuts 👏👏
Dhruv Jurel also makes his T20I Debut 👌👌
Follow The Match ▶️ https://t.co/r08h7yfNHO#ZIMvIND pic.twitter.com/kBrVlaClKg
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்தியா: சுப்மான் கில் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரிங்கு சிங், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது.
ஜிம்பாப்வே: தடிவானாஷே மருமணி, இன்னசென்ட் கையா, பிரையன் பென்னட், சிக்கந்தர் ராசா (கேப்டன்), டியான் மியர்ஸ், ஜொனாதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே (விக்கெட் கீப்பர்), வெலிங்டன் மசகட்சா, லூக் ஜாங்வே, பிளஸ்ஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா.
இதையும் படிங்க: இளம் இந்திய படையை சமாளிக்குமா ஜிம்பாப்வே அணி..இன்று முதல் டி20 போட்டி! - INDIA VS ZIMBABWE T20 SERIES