ETV Bharat / sports

இளம் இந்திய படையை சமாளிக்குமா ஜிம்பாப்வே அணி..இன்று முதல் டி20 போட்டி! - INDIA VS ZIMBABWE T20 SERIES

IND vs ZIM: இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று ஜிம்பாப்வே நாட்டின் ஹராரே மகாணத்தில் தொடங்கவுள்ளது.

சுப்மன் கில் மற்றும் சிக்கந்தர் ராசா
சுப்மன் கில் மற்றும் சிக்கந்தர் ராசா (Credits - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 1:25 PM IST

ஹராரே: டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கவுள்ளது

கில் தலைமையிலான இந்திய அணி: இத்தொடரில் பங்குபெறும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது நடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட முன்னணி வீரர்கள் இந்த தொடரில் விளையாட இருப்பதால், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேலும், இப்போட்டியில் துவக்க வீரர்களாக கேப்டன் கில் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி: ஜிம்பாப்வே அணியை பொறுத்தமட்டில் அனுபவ வீரர் சிக்கந்தர் ராசா தலைமை தாங்குகிறார். மேலும், இந்த அணியில் மூத்த வீரர்களான கிரெய்க் எர்வின், ஷான் வில்லியம்ஸ், ரையன் பர்ல் உள்ளிட்டவர்கள் இடம் பெறாமல் இருப்பது பின்னடைவாக கருதப்படுகிறது. அதேபோல், இந்த அணியில் 25 வயது இளம் ஆல்ரவுண்டர் நக்வி அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார்.

பிட்ச் ரிப்போர்ட்: இப்போட்டி நடைபெறவுள்ள ஹராரே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், இப்போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 152 ரன்கள் ஆகும். இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 229 ரன்களாகும். இதன் காரணமாக, டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தால் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்: இதுவரை இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் நேருக்கு நேர் மொத்தம் 8 முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 6 முறையும், ஜிம்பாப்வே 2 முறையும் வென்றுள்ளது.

இந்திய அணி வீரர்கள் விபரம்: சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன், ரிங்கு சிங், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ராணா

ஜிம்பாப்வே அணி வீரர்கள் விபரம் : சிக்கந்தர் ராசா (கேப்டன்), அக்ரம் ஃபராஸ், பென்னட் பிரையன், காம்ப்பெல் ஜொனாதன், சதாரா டெண்டாய், ஜாங்வே லூக், கையா இன்னசென்ட், மடாண்டே(விக்கெட் கீப்பர்), மாதேவெரே வெஸ்லி, மருமணி ததிவானாஷே, மசகட்சா வெலிங்டன், மவுடா பிராண்டன், முசரபானி பிளெஸ்ஸிங், நகர்விட், மையர்ஸ் , மில்டன் சும்பா

இதையும் படிங்க: IND Vs SA; இந்திய மகளிர் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.