தமிழ்நாடு

tamil nadu

தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் யோகி பாபு!

By

Published : Nov 6, 2020, 8:20 PM IST

Updated : Nov 6, 2020, 8:29 PM IST

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ’பேய் மாமா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

யோகி பாபு
யோகி பாபு

’சார்லி சாப்ளின் 2’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள திரைப்படம், ’பேய் மாமா’. இதில் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று(நவ.06) நடிகரும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிடுவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அறிவித்தபடி ’பேய் மாமா’ படத்தின் ட்ரெய்லரை ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வழக்கம் போல் யோகி பாபு தனது நகைச்சுவை தன்மையை அதில் வெளிக்காட்டியுள்ளார்.

ட்ரெய்லரில் யோகி பாபு தனக்கு தமன்னாவை திருமணம் செய்து கொள்வது தான் ஒரே ஆசை என்று பேசியிருக்கும் வசனம், அவரது ரசிகர்களிடையே வைரலாகிறது. விரைவில் இப்படத்தைப் பற்றி கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'ஈஸ்வரன்' பிடிச்சது டம்மி பாம்பு - சுசீந்திரன் அறிக்கை

Last Updated : Nov 6, 2020, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details