தமிழ்நாடு

tamil nadu

'சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளத் தயார்' - மஹத் ராகவேந்திரா

By

Published : May 12, 2020, 12:08 PM IST

சென்னை: நடிகர் மஹத் ராகவேந்திரா தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெவித்துள்ளார்.

மஹத்
மஹத்

கரோனா வைரஸ் காரணமாக அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள் பலரும் சிரமத்தில் உள்ளனர். இதையடுத்து தயாரிப்பாளர்களின் சுமையைக் குறைக்கும் விதமாக நடிகர்கள் பலரும் தங்களது ஊதியத்தை குறைத்துக்கொள்வதாக அறிவுறுத்தியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது நடிகரும், சிம்புவின் நெருங்கிய நண்பருமான மஹத் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'இன்றைக்குச் சமூகமும், சினிமாவும் இருக்கும் சூழலில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் போன்ற நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள முன் வந்துள்ளனர். இதைக் கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. நானும் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தத் திரையுலகில் இருக்கிறேன். சில படங்களில் நடித்துள்ளேன். இன்னும் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இப்போதுதான் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கரோனா தாக்கம் காரணமாக, நிலவி வரும் இந்த ஊரடங்கு சூழலில் சினிமா தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது நம்மை வைத்துப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான். திரைப்பட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கூட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று தரப்பினரும் சேர்ந்து முடிவெடுத்து, எங்களுக்கு இவ்வளவுதான் கட்டுப்படியாகும், உங்களுக்கு இவ்வளவுதான் சம்பளம் கொடுக்க முடியும் என அறிக்கை வெளியிட்டார்கள் என்றால், அதற்கு ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன். அது 20 விழுக்காடு, 50 விழுக்காடு, 70 விழுக்காடாக இருந்தால் கூட நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன். என்னைப் போல வளர்ந்து வரும் நடிகர்களும், இதற்கு ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். மஹத்தின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details