தமிழ்நாடு

tamil nadu

வித்தியாசமான ஹாரர் படத்தில் நடிக்கும் விமல்!

By

Published : Oct 9, 2021, 7:07 AM IST

Updated : Oct 9, 2021, 10:02 AM IST

ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

vimal
vimal

சரத்குமார் நடித்த 'மகாபிரபு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஏ. வெங்கடேஷ். அதன்பிறகு 'செல்வா', 'நிலாவே வா', 'பகவதி', 'குத்து', 'வாத்தியார்' உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்ஷியல் இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம்வருகிறார்.

தற்போது வெங்கடேஷ் யாஷிகா ஆனந்தை வைத்து 'பாம்பாட்டம்' திரைப்படத்தையும் ஷெரின் நடிப்பில் 'ரஜினி' படத்தையும் இயக்கிவருகிறார். இதைத் தொடர்ந்து வெங்கடேஷ், நடிகர் விமலை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.

படப்பிடிப்பு பூஜை

இப்படத்தை வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் பழனிவேல் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. இதில் விமலுடன் தம்பி ராமையா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு பூஜை

படம் பற்றி இயக்குநர் வெங்கடேஷ் கூறியதாவது. "நான் இயக்கும் முதல் பேய் படம் இது. முற்றிலும் மாறுபட்ட இதுவரை யாரும் பார்த்திராத ஒரு வித்தியாசமான ஹாரர் படமாக இருக்கும்.

மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுவருகிறது. விரைவில் புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிட்டுளோம்" என்றார்.

இதையும் படிங்க: நடிகர் விமல் புகார்: திரைப்படத் தயாரிப்பாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Last Updated : Oct 9, 2021, 10:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details