தமிழ்நாடு

tamil nadu

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

By

Published : Nov 15, 2021, 11:16 AM IST

நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அவரது வீட்டில் காவல் துறையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர்.

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

திரையுலகப் பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாக இருந்துவருகிறது. இந்த நிலையில், விஜய் வீட்டில் நேற்றிரவு (நவம்பர் 14) வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் வந்தது.

இதனையடுத்து வெடிகுண்டு வல்லுநர்கள் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர். சோதனையில் அங்கு வெடிகுண்டு கிடைக்காத காரணத்தினால் அது பொய்யான தகவல் எனத் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஷ் குமார் என்பதும், முன்னதாக அவர் பல பிரபலங்களின் வீட்டிற்கு இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் வாடிக்கையாகவே இதனைச் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர்!

ABOUT THE AUTHOR

...view details