தமிழ்நாடு

tamil nadu

ஜப்பான் பிரதமர் இந்தியப் பயணத்தை ரத்து செய்வாரா?

By

Published : Dec 13, 2019, 6:43 PM IST

டோக்கியோ: அஸ்ஸாமில் நீடித்துவரும் பதற்றநிலை காரணமாக இந்தியா-ஜப்பான் நாடுகள் இடையேயான உச்சிமாநாடு பயணத்தை ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ஒத்திவைத்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் இந்தியா பயணம்
ஜப்பான் பிரதமர் இந்தியா பயணம்

இந்தியாவில் உச்சிமாநாடு அச்சாம் மாநிலத்தின் தலைநகர் குவஹாத்தியில் நடத்த வரும் 15-17ஆம் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே வருவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் குடியுரிமை திருத்த மசோதாவால் அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகர் குவஹாத்தியில் தொடர் போராட்டம் என பதற்றமான நிலை நிடித்துவருவதால் ஜப்பான் பிரதமர் தனது மூன்று நாள் பயணத்தை ரத்து செய்வதாக அந்நாட்டின் ஊடகம் தெரிவித்துள்ளது

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவிக்கையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு தேதி தள்ளிப்போடுவதாகவும் மேலும் புதிய தேதியை இரு நாடுகள் தரப்பிலும் முடிவு செய்யப்பட்டு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதியை மாநாட்டிற்கு முன்னதாகச் சந்தித்ததாக பிஐபி (PIB) தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: பிரிட்டன் தேர்தலில் அபார வெற்றி; பிரதமராகும் போரிஸ் ஜான்சன்!

ABOUT THE AUTHOR

...view details