ETV Bharat / international

ஹஜ் புனித யாத்திரை: 1,300ஐ தாண்டிய பலி! உயிரிழப்பு அதிகரிக்க என்ன காரணம்? அரசு கூறுவது என்ன? - Hajj Pilgrims Death Toll - HAJJ PILGRIMS DEATH TOLL

ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் கடும் வெப்பம் தாங்காமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300ஐ தாண்டியது.

Etv Bharat
Representational Image (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 12:42 PM IST

கைரோ: ஆண்டுதோறும் சவுதி அரேபியாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாமியர்கள் குறிக்கோளாக கொண்டு இருக்கின்றனர். இந்த வருடமும் ஏறத்தாழ 18 லட்சம் மக்கள் இதுவரை ஹஜ் புனிதன் யாத்திரைக்காக சவுதி அரெபியா சென்றுள்ளனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவும் வரலாறு காணாத வெப்பம் மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள உஷ்ணம் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடும் வெயில் காரணமாக நாவறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகும் மக்கள் சுருண்டு விழுந்து உயிரிழக்கின்றனர்.

இந்த ஆண்டில் மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் ஆயிரத்து 300 பேர் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக சவுதி சுகாதார அமைச்சர் பஹித் பின் அப்துர் ரஹ்மான் தெரிவித்து உள்ளார். இதில் 83 சதவீதம் பேர் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் என்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மெக்காவுக்கு நீண்ட பயணம் மேற்கொண்ட போது மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கால நிலை மாற்றத்தால் வரலாறு காணாத வகையில் கடும் உஷ்ணம் நிலவுவதாகவும், வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்த 95 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். அதில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் வான் போக்குவரத்து மூலம் தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் 660 பேர் எகிப்தை சேர்ந்தவர்கள் என்றும் அதில் 31 பேர் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் என்றும் அவர் கூறினார். தொடர் யாத்ரீகர்கள் உயிரிழப்பு காரணமாக சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரை அழைத்துச் செல்ல உரிமம் பெற்ற 16 டிராவல் ஏஜென்சிகளின் உரிமம் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் எகிப்தில் இருந்து 5 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் ஹஜ் புனித யாத்திரைக்காக சவுதி அரேபியா விரைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எகிப்தை தொடர்ந்து இந்தியா, இந்தோனேஷியா, ஜோர்டான், துனிசியா உள்ளிட்ட பல்வேறு நாடுளை சேர்ந்த யாத்ரீகர்கள் சவுதி அரேபியா உஷ்ணத்தை தாங்க முடியாமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக இந்தோனேஷியாவில் 165 பேரும், இந்தியாவை சேர்ந்த 98 பேரும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் கடும் வெப்பம் காரணமாக சவுதி அரேபியாவில் அதிகளவிலானோர் உயிரிழப்பது இரண்டாவது முறை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆயிரத்து 426 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.

முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் மெக்காவில் கூட்ட நெரிசலில் சிக்கி 111 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு... ஜனநாயகத்தின் கரும்புள்ளி"- பிரதமர் மோடி! - Lok Sabhe session 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.