தமிழ்நாடு

tamil nadu

ஜப்பான் பிரதமருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு

By

Published : Sep 2, 2019, 4:31 PM IST

டோக்கியோ: இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டின் பிரதமர் சின்ஷோ அபேவை சந்தித்துப் பேசினார்.

rajnath singh

பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக இன்று காலை ஜப்பான் சென்றடைந்த ராஜ்நாத் சிங், அந்நாட்டுப் பிரதமர் சின்ஷோ அபேவை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு சிறப்பாக அமைந்திருந்ததாக ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் இந்தியாவின் நோக்கத்தை தான் வெளிப்படுத்தியதாகக் கூறினார்.

அதேபோல், ஜப்பானில் செப்டம்பர் 2, 3 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ராஜ்நாத் சிங், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் டக்கேஷி இவாயாவுடன் 'வருடாந்திர அமைச்சரக ஆலோசனைக் கூட்டத்தில்' பங்கேற்கவுள்ளார்.

மேலும், "இந்தியா-ஜப்பான் இடையிலான வியூக, சர்வதேசக் கூட்டுறவுகளை பலப்படுத்தும் நோக்கில் அமையவிருக்கும் இக்கூட்டம், இருதரப்புப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்" என ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details