தமிழ்நாடு

tamil nadu

நெல்லை அருகே கல்குவாரியில் விபத்து: மீட்பு பணியில் ஹெலிகாப்டர்

By

Published : May 15, 2022, 6:47 AM IST

Updated : May 15, 2022, 8:56 AM IST

திருநெல்வேலி அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்தானதில் பள்ளத்தில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரை மீட்பதற்காக ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட குவாரியில் வந்து இறங்கியுள்ளது.

பாறைக்குள் சிக்கி 6 பேர் தவிப்பு
பாறைக்குள் சிக்கி 6 பேர் தவிப்பு

திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று (மே.14) நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

இதில் 2 லாரிகள், 3 கிட்டாச்சிகள் பள்ளத்தில் மாட்டிக் கொண்டன. லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் உள்பட 6 பேர் பள்ளத்தில் மாட்டிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பேட்டை, பாளையங்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனும் விரைந்தார். அவர் தலைமையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கல்குவாரியில் விபத்து

இந்நிலையில் கிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் ஆகியோர் மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரை மீட்பதற்காக இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட குவாரியில் வந்து இறங்கியுள்ளது.

மீட்பு பணியில் ஹெலிகாப்டர்

மழை தூரல் இருப்பதாலும், சுமார் 300 அடி பள்ளம் என்பதாலும் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Last Updated : May 15, 2022, 8:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details