தமிழ்நாடு

tamil nadu

தேசிய பெண்கள் தினம்: பெண் குழந்தைகள் பாதுகாப்பு, விழிப்புணர்வு சிறப்பு நிகழ்வு!

By

Published : Jan 27, 2021, 5:13 AM IST

குடியரசு தினம், தேசிய பெண் குழந்தைகள் தினங்களை முன்னிட்டு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.

தேசிய பெண்கள் தினம்
தேசிய பெண்கள் தினம்

சேலம்:தேசிய பெண் குழந்தைகள் தினம், குடியரசு தினங்களை முன்னிட்டு பெண்குழந்தைகள் பாதுகாப்பு, விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்வு சேலத்தில் நடைபெற்றது. குழ‌ந்தை நேய சேலம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் வழங்கிய இந்நிகழ்ச்சியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, தற்காப்பு தகவல் குறித்து சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

பப்பட் ஷோ எனப்படும் பொம்மலாட்ட முறையில் இந்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இயற்கை உணவு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்வில் குழ‌ந்தை நேய சேலம் திட்ட மேலாளர் ஜான் பால், ஒருங்கிணைப்பாளர் சாம், ஐயன் திருமாளிகை பகுதி பொது மக்கள், ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:சேலத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details