தமிழ்நாடு

tamil nadu

’பொய் தகவல்களை பரப்புகிறார் முதலமைச்சர்’

By

Published : Jan 8, 2021, 12:55 PM IST

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையில் பல்வேறு பொய்யான தகவல்களை தெரிவித்து வருவதாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

sivalingam
sivalingam

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வீரபாண்டி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலிலும் நேற்று வரை 315 இடங்களில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தியுள்ளோம். இந்தக் கூட்டங்களுக்கு பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

இங்கு பெரும்பாலானவை மலை கிராமம் என்பதால், அடிப்படை வசதிகள் முறையாக அவர்களுக்கு சென்று சேரவில்லை. குறிப்பாக மாணவர்கள் ஆன் லைன் வகுப்புகளில் பங்கேற்க கூட தொலை தொடர்பு வசதி இல்லாத நிலையும், இறந்தவர்களை எடுத்து செல்ல வசதி இல்லாத நிலையும் உள்ளதாக அவர்கள் கடும் குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.

தேர்தல் பரப்புரைகளில் முதலமைச்சர் பொய்யான தகவல்களை மட்டுமே பேசி வருகிறார். பெண்களின் பாதுகாப்புக்கு பெயர்போன மாநிலம் தமிழகம் என்கிறார். பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவத்தில் அதிமுகவினருக்கு தொடர்பு இருப்பதாக ஸ்டாலின் பல முறை கூறினார். அதனை அதிமுகவினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். தற்போது அவ்வழக்கில் அதிமுகவினரே கைது செய்யப்பட்டு, முதலமைச்சரின் முகத்திரை கிழிந்து வருகிறது.

பொங்கல் பரிசுத்தொகை என்பது அரசின் சரர்பில் வழங்கப்படுவது. ஆனால் அதனை அதிமுகவினர் கொடுப்பது போன்று வெளிப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதனால் வரும் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து திமுக ஆட்சியில் அமர்வது உறுதி” என்றார்.

இதையும் படிங்க: அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை பதவி விலகக் கோரி பொள்ளாச்சியில் சுவரொட்டிகள்

ABOUT THE AUTHOR

...view details