தமிழ்நாடு

tamil nadu

இரவு 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news@7PM

By

Published : Aug 31, 2021, 6:58 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச்சுருக்கம்

இரவு 7 மணி செய்திச்சுருக்கம்
இரவு 7 மணி செய்திச்சுருக்கம்

1. போதை பொருள் விற்பனையை தடுக்க சட்ட திருத்தம் - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி அருகில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க சட்ட திருத்தங்கள் கொண்டு வந்து போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2. வருவாய் துறை சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறலாம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்

வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்களை இணையதளம் வழியாக வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என அத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

3. 'வலிமை சிமெண்ட்' - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

வலிமை என்ற புதிய வணிகப் பெயருடன் வெளிச்சந்தையில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

4. ஆர்டிஐ ஆர்வலர்களைப் பாதுகாக்கக்கோரிய மனு - டிஜிபி தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் பெறும் ஆர்வலர்களைப் பாதுகாக்க, தனி அமைப்பை உருவாக்கக் கோரிய வழக்கில், மனுதாரரின் மனுவை விரைந்து பரிசீலித்து தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் தக்க நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

5. படிக்காமல் ஏன் forward செய்தீர்கள்? - எஸ்.வி.சேகரிடம் நீதிபதி கேள்வி

பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

6. வரலாற்றில் முதன்முறை: ஒரேநாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு

உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரேநாளில் ஒன்பது நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

7. 24 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 30 ஆயிரத்து 941 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8. பாராலிம்பிக்கில் வெள்ளி வென்று கெத்துகாட்டிய தமிழன் மாரியப்பன்!

இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற இறுதிப்போட்டியில், மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி, உலகளவில் இரண்டாவது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

9. #HBDyuvan - தற்கால இசையின் ’இளைய’ ராஜா

90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என யாரிடமும் சென்று உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் அதில் யுவன் ஷங்கர் ராஜா முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பார். இசைக்குத் தரம் முக்கியம்தான். அதேசமயம் அந்த இசைக்கு ஈரமும் முக்கியம். தமிழர்களை படுத்திக்கொண்டிருந்த இசையை எம்.எஸ்.வி. அழகுபடுத்தினார், இளையராஜா எளிமைப்படுத்தினார், ஏ.ஆர். ரஹ்மான் அடையாளப்படுத்தினார், யுவன் ஈரப்படுத்தினார். ஆம், யுவனின் இசையும், குரலும் ஈரத்தால் நிறைந்தவை.

10. அடடட ஆரம்பமே.... சும்மா அதிருதடா..! - பிக்பாஸ் 5 ஆரம்பம்

தமிழில் இதுவரை பிக்பாஸ் 4 சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 5 சீசனுக்கான லோகோ இன்று( ஆக.31) மாலை வெளியிடப்பட இருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details