தமிழ்நாடு

tamil nadu

வாகனப்பதிவு காலம் மீண்டும் நீட்டிக்கப் படாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

By

Published : Dec 17, 2021, 1:29 PM IST

Updated : Dec 17, 2021, 2:45 PM IST

கரோனா தொற்று போன்ற காரணங்களைக் கொண்டு அடுத்தமுறை வாகனப்பதிவு காலம் நீட்டிக்கப்படாது என்று தமிழ்நாடு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனப் பதிவு காலம் வரும் டிசம்பர் மாதத்திற்கு மேல் நீட்டிக்கப்படாது எனத் தமிழ்நாடு அரசு தகவல்
வாகனப் பதிவு காலம் வரும் டிசம்பர் மாதத்திற்கு மேல் நீட்டிக்கப்படாது எனத் தமிழ்நாடு அரசு தகவல்

கரோனா பரவல், ஊரடங்கு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பொதுப் போக்குவரத்து வாகனங்களின் அனைத்து ஆவணங்களின் தகுதிச்சான்று புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு செல்லுபடியாகும் கால அளவினை வரும் டிசம்பர் 31ஆம் தேதிவரை கால நீட்டிப்புச் செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு

டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா தொற்றால் பொதுப்போக்குவரத்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பொருளாதார நிலையினைக் கருத்தில்கொண்டு வாகனப்பதிவு, ஓட்டுநர் உரிமம் பதிவுசெய்யும் கால அவகாசத்தினை வரும் 31ஆம் தேதிவரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்படுகிறது.

குறிப்பாக, போக்குவரத்து ஆணையர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசுப் பேருந்துக் கழகம் நிர்வாக இயக்குநர்களிடமிருந்து வரப்பெற்ற கடிதம், அனைத்து தனியார் ஆம்னி போக்குவரத்து உரிமையாளர் சங்கங்களில் பெறப்பட்ட கடிதங்களில் மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அவகாசம் கிடையாது

அதேபோல், தமிழ்நாட்டில் நீட்டிக்க வேண்டும் என்பதினைக் கருத்தில்கொண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டிப்பு செய்ய உத்தரவிடப்படுகிறது. மேலும் இதற்கான கால அவகாசம் கண்டிப்பாக நீட்டிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போலி கால் சென்டர் நடத்திய கும்பல் கைது

Last Updated : Dec 17, 2021, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details