தமிழ்நாடு

tamil nadu

நீதிபதிகளின் மனைவிகள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கு: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

By

Published : Nov 26, 2020, 4:19 AM IST

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ் கர்ணன், நீதிபதிகளின் மனைவிகள் பற்றி ஆபாசமாக பேசிய வழக்கு தொடர்பாக அவரை நேரில் ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

judge-karnan
judge-karnan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ் கர்ணன், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மனைவிகள் பற்றி ஆபாசமாக பேசி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதனால் நீதிபதிகளின் மனைவிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய சி.எஸ் கர்ணன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் அசோசியேசன் சார்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம், ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் நீதிபதி சி.எஸ் கர்ணன் மீது கலகத்தை தூண்டுதல், பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ், மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை விசாரிப்பதற்காக, மத்திய குற்றபிரிவு காவல்துறையினர், அவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் இன்று காலை 10.30 மணியளவில் கர்ணன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details