தமிழ்நாடு

tamil nadu

கட்டட தொழிலாளி கொலை வழக்கு - வடமாநில இளைஞர்கள் நால்வர் கைது

By

Published : Jan 27, 2022, 8:06 PM IST

பெரும்பாக்கத்தில் கட்டட தொழிலாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வடமாநில இளைஞர்கள் நான்கு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெரும்பாக்கத்தில் கட்டிட தொழிலாளி கொலை
பெரும்பாக்கத்தில் கட்டிட தொழிலாளி கொலை

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் காந்தி நகரில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் யூனிஸ்(22). அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் குவாலா(19), சிவம் நாயக்(21), ஜோரா முண்டா(18), பிஜய் நாயக்(20) ஆகிய வட மாநில இளைஞர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இவர்கள் 4 பேருக்கும் யூனிஸ்க்கும் இடையே பணத்தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 2015ஆம் ஆண்டு யூனிஸ் கொலை செய்யப்பட்டதால் 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நால்வருக்கும் நீதிமன்றம் ஜாமின் அளித்த நிலையில் குற்றவாளிகள் நால்வரும் கடந்த 4 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜாராகாமால் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்ய நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்த நிலையில், பெரும்பாக்கம் ஆய்வாளர் மகுடீஸ்வரி தலைமையில் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவலர் ஷேக் முஸ்தக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து அஸ்ஸாம் மாநிலம் சென்றனர்.

காவல் ஆணையாளருக்கு பாராட்டு

அங்கு தலைமறைவாக இருந்த பிஜய் நாயக், ஜோரா முண்டா ஆகிய 2 பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்பு அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 குற்றவாளிகள் திருவள்ளூா் மாவட்டத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் தனிப்படை காவல்துறையினர் மற்ற 2 குற்றவாளிகளான சஞ்சய் குவாலா, சிவம் நாயக் ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை பெரும்பாக்கம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதன் பின்னர் 4 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த 4 ஆண்டுகளாக கொலை வழக்கு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகமால் தலைமறைவாக இருந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் எம்.ரவி பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னையில் ஒரு வேலுநாச்சியார் - யுனிக்கோ உலக சாதனை படைத்த பெண்!

ABOUT THE AUTHOR

...view details