தமிழ்நாடு

tamil nadu

கரோனாவை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் வழங்க வேண்டும் - ஸ்டாலின் வேண்டுகோள்

By

Published : Apr 18, 2021, 7:30 PM IST

Updated : Apr 18, 2021, 7:57 PM IST

கரோனா இரண்டாவது அலையில் இருந்து மக்களை காக்கும் விதமாக, கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

mk stalin statement
மு.க.ஸ்டாலின் அறிக்கை

இதுதொடர்பாக மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றின் முதலாவது அலையின் போது 'ஒன்றிணைவோம் வா' என்ற மாபெரும் மக்கள் இயக்கம் மூலம் மனித நேயப் பணிகளை திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றியது. தற்போது கரோனா இரண்டாவது அலை தொடங்கிய போது, தொண்டர்கள் அனைவரும் பணியாற்றிட வேண்டும் என ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதை நான் அறிவேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டோர் தேர்தல் நடத்தை விதி முறைகள் காரணமாக இந்தப் பணியில் ஈடுபட முடியாத நிலை இருந்தது.

ஆகவே, கழக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி மூலம் தேர்தல் ஆணையத்திடம் இதற்குக் திமுக சார்பில் அனுமதி கோரப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று கரோனா தடுப்புப் பணியின் ஓர் அங்கமாக கபசுரக் குடிநீர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஆட்சேபணை இல்லையெனத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும், வேட்பாளர்களாக இருக்கும் மாவட்டச் செயலாளர்களும் கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு கரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிடத் தீவிரப் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அவ்வாறு கபசுரக் குடிநீர் வழங்கும் போது அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்களைச் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வேட்பாளர்கள் அனைவரும் உரிய வகையில் தெரிவித்து அரசு அறிவுறுத்தியுள்ள தனிமனித இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்புக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடித்து பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதி்ல் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உண்மை நிலவரம் என்ன?

Last Updated : Apr 18, 2021, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details