தமிழ்நாடு

tamil nadu

கருத்துக் கணிப்பு: ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் கடிவாளம்!

By

Published : Mar 25, 2021, 10:20 PM IST

Updated : Mar 25, 2021, 10:49 PM IST

சென்னை: தொலைக்காட்சிகள், ஊடகங்கள் கருத்துக் கணிப்பு முடிவுகளை ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்த பின்னர்தான் வெளியிட வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஊடகங்களுக்கு விதிமுறைகள் அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்
ஊடகங்களுக்கு விதிமுறைகள் அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை நடைபெறவுள்ளன.

விதிமுறைகள் அறிவிப்பு

இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட மின்னணு ஊடகம், பத்திரிகைகளுக்கு விதிமுறைகளை அறிவித்து, இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம்

மார்ச் 27ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 7.30 மணிவரை, வாக்குப்பதிவிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது, அதனை அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது, வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவை தடைசெய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு விதிமுறைகள் அறிவித்த இந்தியத் தேர்தல் ஆணையம்

தேர்தலன்று...

1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126 (1) (b) ஆம் பிரிவின்கீழ், ஒவ்வொரு கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில், ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடைசெய்யப்படும் என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

Last Updated : Mar 25, 2021, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details