தமிழ்நாடு

tamil nadu

இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை மாநகராட்சி

By

Published : May 12, 2021, 5:22 PM IST

சென்னை: மருத்துவப் பணியில் மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாக பணிபுரிய, இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம், சென்னை மாநகராட்சி, Final year medical students for temporary medical camps, chennai corporation
Final year medical students for temporary medical camps

கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. சென்னையில் தினமும் ஆறாயிரத்திற்கும் மேல் மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் இணைந்து முகக்கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மருத்துவ முகாமைப் பொறுத்தவரையில், வார்டுக்கு இரண்டு அல்லது மூன்று என கிட்டத்தட்ட 400 மருத்துவ முகாம்களை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி கரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தினமும் நலன் விசாரிக்கத் தனியாக மண்டலம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவ முகாமில் மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாகப் பணிபுரிய இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பணிக்கு மொத்தமாக 300 காலி இடங்கள் உள்ளன; மாத ஊதியம் ரூ.40,000. விருப்பம் உள்ளவர்கள் நாளை (மே 13) மதியம் 2 மணிக்குள் gccteledoctor2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களது சுயவிவரம்(Resume), இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ், +2 மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றை அனுப்பவேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நாளை மறுநாள் (மே 14) தொலைபேசி மூலமாக நேர்காணல் (Telephonic interview) நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள் மே 14ஆம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் பணிபுரிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மண்ணில் உலவும் தேவதைகள் செவிலியர்கள்

ABOUT THE AUTHOR

...view details