தமிழ்நாடு

tamil nadu

ஆளில்லா விமானம், ரோபோக்களுக்கு புதிய 5ஜி இயங்குதளம்: அதிரடி காட்டும் குவால்காம்

By

Published : Jun 19, 2020, 7:24 PM IST

புதிய ரோபாட்டிக்ஸ் RB3 இயங்குதளத்தை அறிமுகப்படுத்துவதாக குவால்காம் அறிவித்துள்ளது. இது 5 ஜி இணைப்புடன் கூடிய உலகின் முதல் ரோபோடிக் இயங்குதளம் எனக் கூறப்படுகிறது. குவால்காம் ரோபாட்டிக்ஸ் ஆர்.பி 5 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட வணிக தயாரிப்புகள் 2020ஆம் ஆண்டில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

qualcomm
qualcomm

சமீபத்திய இயங்குதளமான குவால்காம் QRB5165 செயலி ரோபாட்டிக்ஸ் பயன்பாடுகளுக்கு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது 5ஆவது தலைமுறை குவால்காம் செயற்கை நுண்ணறிவுடன் ஒரு வினாடிக்கு 15 டெரா செயல்பாடுகளுடன் (TOPS) சக்தியூட்டப்பட்டுள்ளது.

கேமராக்களில் வினாடிக்கு 2 ஜிகாபிக்சல்களை செயலாக்க முடியுமாம். இது 8K வீடியோ பதிவு மற்றும் 200 மெகாபிக்சல் புகைப்படங்களையும் எடுக்கும் திறனை தகவல் சாதனங்களுக்கு அளிக்கும்.

ரோபாட்டிக்ஸ் RB5 டெவலப்மென்ட் கிட்டையும் குவால்காம் வெளிப்படுத்தியுள்ளது. புதிய படைப்பாளிகளுக்கு ஏதுவாக லினக்ஸ், உபுண்டு மற்றும் ரோபோ ஆபரேட்டிங் சிஸ்டம் (ROS) 2.0க்கான தளத்திற்குண்டான ஆதரவுகளை வழங்கும்.

கூடுதலாக, குவால்காம் ரோபாட்டிக்ஸ் RB5 டெவலப்மென்ட் கிட்டில் இன்டெல் ரியல்சென்ஸ் கேமரா D435i மற்றும் பானாசோனிக் TOF கேமராவுடன் உணர்திறன் அமசங்களை கொண்டிருக்கிறது.

மேலும், குவால்காம் ரோபாட்டிக்ஸ் RB5 இயங்குதளம் நீண்ட தூர வைஃபை மற்றும் வைஃபை 6 (802.11ax), புளூடூத் 5.1, 4ஜி, 5ஜி ஆதரவைக் கொண்டு உயர்தர இணைப்புகளுடன் வருகிறது. புதிய வகை அதிதிறன் கொண்ட ரோபோக்கள், ஆளில்லா விமானங்களை உருவாக்க இந்த வன்பொருள் சாதனம் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details