தமிழ்நாடு

tamil nadu

'Made in India' - அமேசான் இந்தியாவின் டாய் ஸ்டோர்!

By

Published : Nov 18, 2020, 7:16 PM IST

அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் மனிஷ் திவாரி இதுகுறித்து, பாரம்பரிய கலைப்பொருட்கள், கைவினை பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்தியா தாய் நிலம் ஆகும். எங்கள் முயற்சியின் மூலம் இந்திய பொருட்களின் விற்பனை விகிதம் இன்னும் அதிகரிக்கும் என மனிஷ் திவாரி தெரிவித்தார்.

'Made in India' - அமேசான் இந்தியாவின் டாய் ஸ்டோர்!
'Made in India' - அமேசான் இந்தியாவின் டாய் ஸ்டோர்!

பெங்களூரு: அமேசானின் ‘மேட் இன் இந்தியா’ விளையாட்டு சாதனங்கள் விற்பனை மூலம் உள்ளூர் விளையாட்டு பொருள் தயாரிப்பாளர்கள் பலனடைய முடியும், சீன பொம்மைகளின் வரவை நம்மால் குறைக்க முடியும் என கர்நாடக துணை முதலமைச்சர் அஷ்வத் நாராயணா தெரிவித்துள்ளார்.

அமேசான் இந்தியா நிறுவனம், ‘மேட் இன் இந்தியா’ என்ற பெயரில் விளையாட்டு சாதனங்கள் விற்பனையை தொடங்கியுள்ளது. இந்திய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை முன்னெடுக்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக கர்நாடக துணை முதலமைச்சர் அஷ்வத் நாராயணா, அமேசான் இந்தியாவின் இம்முயற்சியை மனதார பாராட்டுகிறேன். இதில் எங்கள் புகழ்பெற்ற சன்னபாட்னா பொம்மைகள் இடம்பெறும். இதன்மூலம் உள்ளூர் வியாபாரிகள், கலைஞர்கள் நன்மையடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

பம்பரம் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் விளையாட்டு பொருட்களை அமேசான் இந்தியா விற்பனை செய்யவுள்ளது. அறிவியல் மற்றும் சிந்தனை மேம்படுத்தும் விதமான விளையாட்டுப் பொருட்களும் இதில் விற்பனை செய்யப்படவுள்ளன.

'Made in India' - அமேசான் இந்தியாவின் டாய் ஸ்டோர்!

அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் மனிஷ் திவாரி இதுகுறித்து, பாரம்பரிய கலைப்பொருட்கள், கைவினை பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்தியா தாய் நிலம் ஆகும். எங்கள் முயற்சியின் மூலம் இந்திய பொருட்களின் விற்பனை விகிதம் இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details