ETV Bharat / bharat

"ஆம்ஸ்ட்ராங் கொலை கொடூரமானது.. தமிழக அரசு மீது நம்பிக்கை உள்ளது"- ராகுல் காந்தி கண்டனம்! - Rahul condemn BSP TN leader Murder - RAHUL CONDEMN BSP TN LEADER MURDER

தமிழ்நாடு பகுஜான் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொடூரமானது மற்றும் அறுவறுக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக கூறினார்.

Etv Bharat
Congress leader Rahul Gandhi (ANI Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 1:12 PM IST

டெல்லி: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான மற்றும் அருவருக்கத்தக்க வகையில் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது உணவு டெலிவிரி செய்வது போல் இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலால், சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீசார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

அதேபோல் பகுஜான் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, "தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், அவரது சென்னை வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. தொழிலில் ஒரு வழக்கறிஞர், மாநிலத்தில் வலுவான பட்டியலின மக்களின் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஈரான் அதிபர் தேர்தல்: பெண்கள் ஹிஜாப் அணி எதிர்ப்பு தெரிவித்தவர் வெற்றி! - Iran President election

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.