புது டெல்லி: ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட்ட இருந்த முதுகலை நீட் நுழைவுத் தேர்வு, இளநிலை நீட் தேர்வு குளறுபடி சர்ச்சையால் கடைசி கட்டத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், முதுகலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11 அன்று இரண்டு ஷிப்ட்டுகளாக நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இளநிலை நீட் தேர்வில் நடந்த குளறுபடியால் சர்ச்சை எழுந்ததை அடுத்து ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வை ஜூன் 22ஆம் தேதி அன்று மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்தி வைத்தது.
அதன் பின்னர் தேர்வை வலிமையாக கையாள்வதை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு வாரிய அதிகாரிகள், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் சைபர் செல் ஆகியவற்றை சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களுடன் பல கட்ட கூட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில், முதுகலை நீட் தேர்வை நடத்தலாம் என்ற முடிவுக்கு பின்னர் ஆகஸ்ட் 11 இல் தேர்வு நடக்கவுள்ளது. மேலும், முதுகலை நீட் தேர்வின் செயல்முறைகளின் வலுவான தன்மையை மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசிய தேர்வு முகமை அதன் தொழில்நுட்ப ஆதரவான டிசிஎஸ் உடன் இந்த தேர்வை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வடகொரிய அதிபரை தொடர்ந்து புதினை சந்திக்கும் பிரதமர் மோடி! என்ன காரணம்?