தமிழ்நாடு

tamil nadu

1.10 கோடி கோவிஷீல்டு, 55 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசிகள்- மத்திய அரசு கொள்முதல்

By

Published : Jan 12, 2021, 4:45 PM IST

Updated : Jan 12, 2021, 8:02 PM IST

ராஜேஷ் பூஷண்
ராஜேஷ் பூஷண்

16:38 January 12

உருமாறிய கரோனா பரவிவரும் நிலையில், சீரம் நிறுவனத்திடமிருந்து 1.10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளும், பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 55 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசிகளும் மத்திய அரசு முதற்கட்டமாக கொள்முதல் செய்யவுள்ளது. 16.5 லட்சம் பயனாளர்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாகத் தர பாரத் பயோ டெக் நிறுவனம் முன்வந்துள்ளது.

ஒரு டோசிற்கான விலையை சீரம் நிறுவனம் ரூ.200 எனவும் பாரத் பயோ டெக் நிறுவனம் ரூ.295 எனவும் நிர்ணயித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வரும் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:திருமணமாகவிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை!

Last Updated : Jan 12, 2021, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details