நீலகிரி:தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக் குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழு, இன்று நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு குறித்து பேசிய வேல்முருகன், “இந்த ஆய்வில் குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்த 1 காலாவதி ஆகியிருக்கும் வாகனத்தை நீக்கி, புதிய வாகனம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் தீடீர் ஆய்வு!
Published : Aug 23, 2024, 8:39 PM IST
மேலும், காலியாக உள்ள 13 பணியிடங்களை உடனடியாக நிரப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பின், பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல், அரசு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட எக்ஸ்ரே மெஷின் அறைகள் குறித்தும், சிகிச்சை முறை பற்றியும் கேட்டறிந்தோம். பின், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்குச் சொந்தமான இன்கோசர்வ் தொழிற்சாலையின் புதிய இயந்திரங்களை பார்வையிட்டோம்” என்றார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் குன்னூர் கோட்டாட்சியர் சதீஷ் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.