தஞ்சாவூர்:உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி 8ஆம் நாளாக நேற்று ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு, மகாதீபாரதனை காட்டப்பட்டது. மேலும், பெரிய கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக கெஜலெட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.
நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்த பெரியநாயகி அம்மன்!
தஞ்சை பெரியநாயகி அம்மன் (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Oct 11, 2024, 9:53 AM IST
அதேபோல், தஞ்சையில் பிரசித்தி பெற்ற கொங்கணேஸ்வரர் கோயில் துர்காம்பிகைக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், காளிகா பரமேஸ்வரி கோயில் அம்மனுக்கு ராஜேஸ்வரி அலங்காரமும், அங்காளம்மன் கோயில் அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரமும், சியாமளாதேவி அம்மன் கோயில் அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும் சிறப்பாக செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.