ETV Bharat / health

தினசரி 2 பல் பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! - EATING GARLIC ON EMPTY STOMACH

தினசரி வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Nov 16, 2024, 4:24 PM IST

உணவுகளில் நறுமனத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில், எண்ணற்ற நன்மைகள் இருப்பதை அனைவரும் அறிந்ததே. இருப்பினும், பூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றால் நம்பமுடிகிறதா? தினசரி வெறும் வயிற்றில் பூண்டினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

இரத்த அழுத்தம்: நாள்பட்ட இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள், காலை வெறும் வயிற்றில் 2 பல் பூண்டினை சாப்பிட்டு வர, நரம்புகள் வழுவடைந்து நரம்புகள் சுருங்கி விரிவது சீராக்கப்படும். இதன் மூலமாக இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

வயிற்று பிரச்சனை நீங்கும்: காலை வெறும் வயிற்றில் பூண்டினை பச்சையாக சாப்பிட்டு வர கல்லீரல் சீராக செயல்படும். இதனால் உணவு செரிமானத்திற்கு தேவையான நொதிகள் சுரக்கப்பட்டு, செரிமானம் சீராக நடைபெறுவதோடு அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

மன அழுத்தம் கட்டுப்படும்: பச்சை பூண்டு மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக வேலை பளுவில் இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

இதயநோய்: தினசரி பச்சை பூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும்போது, பூண்டின் மூலப்பொருட்கள் இருதய சுவர்களுக்கு அதிக பலன்களை கொடுக்கும். இதனால், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் இருக்கும்.

உடலை சுத்தப்படுத்தும்: வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவற்றை வெளியேற்ற தினமும், ஒரு பச்சை பூண்டை காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு புழுக்களும் வெளியேறும்.

சுவாச பிரச்சனை குணமாகும்: காச நோய், நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பல் சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

கவனம்: பூண்டை பச்சையாக சாப்பிடுவதால், பலருக்கும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனை தவிர்க்க பூண்டினை வேக வைத்தும் சாப்பிட்டு வரலாம். இல்லையென்றால், பூண்டு சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

இதையும் படிங்க:

எடை இழப்பு முதல் முடி வளர்ச்சி வரை..தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகள்!

இடுப்பு கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை..வெறும் வயிற்றில் தினமும் இப்படி சாப்பிடுங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.