தமிழ்நாடு

tamil nadu

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஸ்டாலின் திடீர் விசிட்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 3:48 PM IST

நோயாளிகளிடம் சிகிச்சைப் பற்றி கேட்ட முதலமைச்சர்
நோயாளிகளிடம் சிகிச்சைப் பற்றி கேட்ட முதலமைச்சர் (credits - TNDIPR X Page)

சென்னை:சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மேலும், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும், நரம்பியல் சிகிச்சைப் பிரிவிற்கும் சென்று அங்கு உள்ள நோயாளிகளைச் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் பார்வையிட்டார்.

பின்னர் இதய கேத் லேப்பிற்குச் சென்று ஆய்வு செய்து நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்கள் குறித்தும், மருத்துவ வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, உணவு கூடத்திற்குச் சென்று வழங்கப்படும் உணவின் தரத்தினை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.

அதன்பின், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை ஆய்வு செய்து. அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் முடிவில் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களை நியமிக்குமாறும், டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவிற்கு கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்களை வழங்குமாறும் ஆணையிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details