ETV Bharat / state

விழுப்புரத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள்? உதயநிதிக்கு சி.வி.சண்முகம் கேள்வி! - C V SHANMUGAM

கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் விழுப்புரத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படாத நிலையில், வளர்ச்சிப் பணிகள் குறித்து விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 9:30 AM IST

விழுப்புரம்: செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 30 பேரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் குமரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோரும், விக்கிரவாண்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 40 பேரும் நேற்று (நவ.4) விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரான சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து சி.வி.சண்முகம் பேசியதாவது, “கோபாலபுர குடும்பத்தின் வாரிசாக தேர்வு செய்யபட்டு துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளை (நவ.6) ஆய்வு செய்ய உள்ளார். 4 ஆண்டுகளில் திமுக அரசு விழுப்புரம் மாவட்டத்திற்கு என்ன செய்து இருக்கிறார்கள்? என்ன வளர்ச்சி பெற்று இருக்கிறது? விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சி அடைவதற்கு எதாவது செய்திருக்கிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: “தெலுங்கு மன்னர்கள் படம் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும்”.. கஸ்தூரி மீது தேனியில் பெண்கள் புகார்!

மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் முடக்கப்பட்டு ரத்து செய்யபட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தினை ரத்து செய்தது தான் திமுக அரசின் சாதனை. கடலூரில் மீன்பிடி துறைமுகம் அறிவிக்கப்பட்டு, அதுவும் தற்போது முடக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தி சென்னைக்கு குடிநீர் செல்லும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது” என குற்றம் சாட்டினார்.

குடும்பம் வளர்ச்சி அடைவதற்கு ஆட்சி செய்கிற திமுக அரசு என்ன வளர்ச்சியை விழுப்புரம் மாவட்டதிற்கு கொண்டு வந்தார்கள்? கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் எந்த வளா்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படாத நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாவட்டத்துக்கு வந்து எந்தப் பணியை ஆய்வு செய்ய உள்ளார் எனத் தெரியவில்லை.

ஆறாகப் பெருகி ஓடுகிற கள்ளச்சாராயம், கஞ்சா, போதைமாத்திரைகளைக் கட்டுப்படுத்த தவறிய, செயல்படாத காவல்துறையை முதலில் செயல்பட முயற்சி எடுக்க வேண்டும். விழுப்புரம் நகரத்திற்குக் கொண்டு வர வேண்டிய டைட்டல் பார்க்கை, எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல் புதுச்சேரி அருகே கொண்டு செல்லப்பட்டதால் வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.