ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதிய கொடி மரம்.. எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயில் கொடி மரத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயில் கொடிமரத்தை அகற்றிவிட்டு, வேறு இடத்தில் புதிய கொடிமரம் அமைக்க இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லை கோவிந்தராஜரின் பக்தர் ஹரிஹரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கொடிமரம் தொடர்பாக சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையில் 1860ஆம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டது. இது சம்பந்தமான வழக்கில் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: “பிரிந்திருந்தாலும் குழந்தையைப் பார்க்க கணவருக்கு உரிமை உண்டு” - ஐகோர்ட்!

அதன்படி, கொடிமரத்தை அலங்காரமாக வைத்துக் கொள்ளலாம். எந்த பூஜையும், பிரம்மோற்சவ விழாவும் நடத்தக் கூடாது என சிதம்பரம் முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 160 ஆண்டுகளாக எந்த பிரமோற்சவமும் நடத்தப்படவில்லை. தற்போது கொடிமரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைப்பது, முன்சீப் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.

மேலும், சடங்கு - சம்பிரதாயங்களுக்கு எதிரானது. எனவே, தில்லை கோவிந்தராஜர் கோயிலில் புதிய கொடிமரம் அமைக்க தடை விதிக்க வேண்டும். புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.