சென்னை :சென்னையில் திருவெற்றியூர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், பட்டினம்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடல் பகுதியில் விநாயகர் சிலை கரைக்க ஊர்வலமாக மேளதாளத்துடன் நேற்று கொண்டு வரப்பட்டன.
விநாயகர் சிலைகள் ஊர்வலம் விவகாரம்; இந்து முன்னணியினர் 61 பேர் மீது வழக்குப்பதிவு!
இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Sep 16, 2024, 5:17 PM IST
அப்போது திருவல்லிக்கேணி பாரதி சாலை வழியாக விநாயகர் சிலை கடலில் கரைப்பதற்கு கொண்டு செல்லும் போது போலீசார் அனுமதித்த வழியில் செல்லாமல் இந்து முன்னணி அமைப்பினர் திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதி தெரு வழியாக செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். நேற்று கைது செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் 61 பேர் மீது ஜாம் பஜார் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.