கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் வால்பாறையில் 2021ஆம் ஆண்டு முடீஷ் எஸ்டேட் பகுதியில் காயங்களுடன் 8 மாதம் வயதாகும் ஆண் புலியை வனத்துறையினர் பிடித்து, அதற்கு ரொட்டிக்கடை பகுதியில் உள்ள மனித விலங்கு மோதல் மீட்பு மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
8 மாதத்தில் பிடிபட்டு 3 வயதில் வண்டலூர் செல்லும் புலி!
Published : Jul 23, 2024, 4:29 PM IST
பின் அந்த புலிக்கு மானாம்பள்ளி வனப்பகுதியில் மந்திரி மன்றம் மூன்று அடுக்கு பாதுகாப்பில் வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது அந்த புலியின் பல் உடைந்து காயங்கள் ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் முதன் முறையாக புலிக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அந்த புலிக்கு 3 வயது ஆகும் நிலையில், அதற்கு வேட்டையாட தெரியாது என்பதாலும், வனப்பகுதிக்குள் விட்டால் பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களுக்குச் சென்று மனிதர்களை வேட்டையாட வாய்ப்புள்ளதாலும், அந்த புலியை இன்று ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தலைமையில், வண்டலூர் அண்ணா பூங்காவிற்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.