சென்னை: அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகியுள்ள ’புஷ்பா 2’ டிரெய்லர் வரவேற்பை பெற்று வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் புஷ்பா 2 டிரெய்லர் வெளியிடப்பட்டது.
பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. புஷ்பா 2 டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் யுடியூப் டிரெண்டிங்கில் 4 மில்லியன் பார்வையாளர்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த டிரெய்லரில் மிரட்டலான தோற்றத்துடன் அல்லு அர்ஜூன், ஃபகத் ஃபாசில் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.
புஷ்பா முதல் பாகத்தில் 'புஷ்பான்னா... ஃபயர்' என்ற வசனம் டிரெண்டான நிலையில், இந்தச் டிரெய்லரில் 'புஷ்பான்னா வைல்டு ஃபயர்' என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனத்தை இணையத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும் ’புஷ்பா 2’ தெலுங்கு டிரெய்லர் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அல்லு அர்ஜுன் மற்றும் ஃபகத் ஃபாசில் இருவருக்கும் இடையே உள்ள பகை இந்த பாகத்தில் பெரிதாகி விட்டதும் ட்ரைலரை பார்க்கும் போது தெரிகிறது.
இதையும் படிங்க: கம்பீர தோற்றத்தில் நயன்தாரா: 'ராக்காயி' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!
ஏஜிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ’புஷ்பா 2’ படத்தை வெளியிடும் நிலையில், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து தமன் இசையமைத்துள்ளார். புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா ஆடிய பாடல் பிரபலமடைந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் ஸ்ரீலீலா ’kissik song’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். புஷ்பா 2 மிரட்டலான டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்