தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு!

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 9:35 PM IST

திண்டுக்கல்:கொடைக்கானலில் தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் கூட்டணி நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை கணக்கெடுக்கவும், கடந்த மே 7 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இ-பாஸ் நடைமுறை திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இ-பாஸ் அமலில் இருந்த 116 நாட்களில் , இதுவரை பயணிகள் 17,20,277, வாகனங்கள் 2,90,700 எண்ணிக்கையிலான இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் பயணிகள் 7,15,390, வாகனங்கள் 1,09,760 வருகை புரிந்துள்ளனர் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இ-பாஸ் பதிவு நடைமுறையை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பிரத்தியேக இணையதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். இதேபோல் உதகமண்டலத்திற்கு வருவோர்க்கும் இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details