ETV Bharat / state

"காதலர்கள் கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது இயல்பே" - நீதிமன்றம் கருத்து!

காதலிப்பவர்கள் கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 43 minutes ago

மதுரை : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இந்த வழக்கில் மனுதாரர் 20 வயதானவர். இவரும் 19 வயது இளம் பெண் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் சந்தித்தபோது இரவு வெகு நேரம் பேசியுள்ளனர்.

அப்போது மனுதாரர் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் கூறி மனுதாரர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காதலிப்பவர் கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : "குடிப்பழக்கத்தால் விக்னேஷ் உயிரிழப்பு".. கிண்டி அரசு மருத்துவமனை இயக்குநர் விளக்கம்

இந்த வழக்கில் ஏற்கனவே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டாம் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறையினர் விசாரணையை முடித்து ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கையும் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது. ஆகவே மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கையும், கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் ரத்து செய்யப்படுகிறது" என உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடித்து வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 43 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.