விழுப்புரம்: திரு.வி.க. வீதியில் உள்ள இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் கூடுதலாக பணம் பெறப்படுவதாக கிடைத்த புகாரின் பேரில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. சத்யராஜ், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையிலான போலீசார், இணை சார் பதிவாளர் அலுவலகம் எண். 2ல் நேற்று இரவு 8:15 மணிக்கு சோதனை நடத்தினர்.
விழுப்புரம் சார் பதிவாளர் ஆபிஸில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அதிரடி சோதனை.. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!
Published : May 21, 2024, 1:10 PM IST
மேலும், அலுவலகத்தில் இருந்த இணை சார் பதிவாளர் தையல் நாயகி மற்றும் அலுவலக ஊழியர்கள் மற்றும் பத்திரப்பதிவுக்கு காத்திருந்த பொதுமக்களிடமும் விசாரணை நடத்தினர். பதிவுக்கு வந்திருந்த பொதுமக்கள் சிலர் பத்திரப்பதிவுக்கு அதிகளவில் லஞ்சம் பெறுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கை, அதற்குரிய கட்டணம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் சரி பார்த்த போது கணக்கில் வராத பணம் ரூபாய் 1.80 லட்சம் சிக்கியது. தொடர்ந்து நேற்று இரவு 10:30 மணி வரை சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.