தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

டெலிகிராம் மூலம் சிறார் ஆபாச படங்கள் விற்பனைக்கு விளம்பரம்.. சைபர் கிரைம் போலீசார் அதிரடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 10:31 AM IST

கைது செய்யப்பட்ட இளைஞர்  பிரசாந்த்
கைது செய்யப்பட்ட இளைஞர் பிரசாந்த் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சிறார் ஆபாச வீடியோக்களை இணையத்திலிருந்து இறக்குமதி செய்து பார்ப்பது, பகிர்வது குற்றம் எனவும், அவற்றை மீறினால் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில் டெலிகிராம் (Telegram) செயலியில் சிறார் ஆபாச படங்களை விற்பனை செய்வதாக ஆவடி காவல் ஆணையர் சங்கருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரவீன்குமார், சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மணலி அடுத்த சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்(24) என்ற இளைஞர் சிறார் ஆபாச படங்களை 99 படங்கள் ரூ.100க்கும், 250 படங்கள் ரூ.150க்கும், 1000 படங்கள் ரூ.200க்கும் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, பிரசாந்த் என்பவரை கைது செய்த போலீசார், சிறார் ஆபாச படங்களை விளம்பரம் செய்யப் பயன்படுத்திய 2 செல்போன்களை கைப்பற்றினர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details