வேலூர்: விஜயதசமி நாள் என்பது நவராத்திரி விழாவின் பத்தாவது நாளாகும். இந்த நாளில் எந்தத் துறையிலும் கற்றலைத் தொடங்க நல்ல நாளாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், விஜயதசமியை முன்னிட்டு வேலூர் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விஜயதசமி நாளை முன்னிட்டு, வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள மழலையர் பள்ளியில் குழந்தைகள் சிறப்பு சேர்க்கை நடைபெற்றது. கல்விக்கு உகந்த நாளான இன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். பெற்றோர்களையும், குழந்தைகளையும் ஆசிரியப் பெருமக்கள் வரவேற்று இனிப்புகள் வழங்கினர். பின்னர், பள்ளியில் சேர்ந்த குழந்தைகள் தங்கள் பெற்றோரின் துணையுடன் நெல்லில் 'அ' என்ற தமிழ் எழுத்தை எழுதி தங்களின் கல்விக்கான அத்தியாயத்தை துவக்கினார்கள்.