சென்னை: சென்னையில் கடந்த பல மாதங்களாக தனியார் கல்வி நிறுவனங்கள், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து நேற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார்ப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் முகவரிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நாட்டின் துணை தூதரக அலுவலகத்திற்கு மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராயப்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் துணைத் தூதரகம் முழுவதும் சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: மெக்கானிக்கிற்கு அடித்த ரூ.25 கோடி பம்பர்.. கேரள லாட்டரியில் கர்நாடகா நபருக்கு ஜாக்பாட்!
இதன் பின்னர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புரளி என தெரிய வந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்னர் புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்கள் யார்? எதற்காக இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்