சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தின் ஆளுமைக்குட்பட்ட சட்டக் கல்லூரிகளில், 2024 - 2025ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 10 முதல் 31 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப்படிப்பு; கட் ஆப் மதிப்பெண் வெளியீடு!
Published : Jun 6, 2024, 10:30 PM IST
இக்கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 24,026 விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டுள்ளது. சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான 624 இடங்களுக்கு 7,042 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதேபோல், பல்கலைக்கழகத்தின் ஆளுமைக்குட்பட்ட சட்டக் கல்லூரிகளுக்கான 2,043 இடங்களுக்கு 16,984 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்ஆப் மதிப்பெண் (Cut-Off) ஆகியவை பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.