தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

“விஜய் அண்ணா..” விஜயின் ரியாக்‌ஷன் என்ன? - Vijay in Airport viral video - VIJAY IN AIRPORT VIRAL VIDEO

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 5:29 PM IST

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடித்து வருகிறார். முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு, தமிழ்நாட்டில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கடந்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக நடிகர் விஜய் துபாயில் இருந்து சென்னை வந்தார். இந்த நிலையில் ஓய்வுக்குப் பின் மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, 15 பேர் கொண்ட குழுவுடன் நடிகர் விஜய் துபாய் செல்வதற்காக இன்று (மே 11) சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நடிகர் விஜயைக் கண்ட ரசிகர்கள், விஜய் சார், விஜய் அண்ணா என கோஷம் எழுப்பினர். மேலும் நடிகர் விஜய், விமான நிலைய நுழைவாயில் உள்ளே செல்லும் போது, வரிசையில் நின்று சென்றது குறிப்பிடத்தக்கது. 

ABOUT THE AUTHOR

...view details