தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தத்ரூபமான நாராயணி தேவி அம்மன்! விளக்குப் பூஜையில் வெளிநாட்டு பெண்கள்! - VELLORE THANGA KOVIL VILAKKU POOJA

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2025, 12:37 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் அரியூரில் ஸ்ரீ நாராயணி தேவி அம்மன் தங்க கோயில் உள்ளது. இந்த கோயில் கட்டப்பட்டு நேற்றுடன் (பிப்.2) 24 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 25-ம் ஆண்டு இன்பு தொடங்கியது. இதன் சிறப்பு நிகழ்வாக, கோயில் வளாகத்தில் உலக மக்களின் நன்மை வேண்டியும், இயற்கை வளங்கள் பெறுக வேண்டியும், கால்நடைகள் நலமாக இருக்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சாமி நாராயணி தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

மேலும், 1008 விளக்குகள் ஏற்றப்பட்டு விளக்கு பூஜையும் நடத்தப்பட்டது. இந்த பூஜையை தங்க கோயில் நிறுவனர் சக்தியம்மா விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இந்த விளக்கு பூஜையில் அம்மன் தத்ரூபமாக கண் திறப்பதை போல் மின் விளக்கால் செய்யப்பட்டிருந்தது.

மேலும் நேற்று இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.  இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரளான பெண்கள் உள்பட வெளிநாட்டு பெண்களும் கலாச்சார உடையான சேலையுடன் விளக்கு பூஜையில் பங்கேற்று, விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details