மத்திய பட்ஜெட் 2025 நேரலை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிடுகிறார்! - UNION BUDGET 2025
Published : Feb 1, 2025, 11:01 AM IST
நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை 2025-26 இன்று (பிப்.1) காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 13ஆம் தேதி வரை ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட அமர்வு மீண்டும் மார்ச் 10ஆம் தேதி கூடி ஏப்ரல் 4ஆம் தேதி முடிவடைகிறது. ஒட்டுமொத்தமான இந்த முழு பட்ஜெட் கூட்டத்தொடரும் 27 அமர்வுகளைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக எட்டாவது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக, நேற்று வெள்ளிக்கிழமை பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதில் 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) 6.3 - 6.8 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புதிய வருமான வரி வரம்புகள், சேமிப்பு திட்டங்களுக்கு வரி விலக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கான ஜிஎஸ்டி குறைப்பு வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.