LIVE: கம்பம், ஆண்டிப்பட்டி பகுதிகளில் டிடிவி தினகரன் பரப்புரை! - TTV Dhinakaran Campaign - TTV DHINAKARAN CAMPAIGN
Published : Mar 26, 2024, 6:30 PM IST
|Updated : Mar 26, 2024, 9:51 PM IST
தேனி: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன், 3வது நாளாக இன்று (மார்ச் 26) கம்பம் மற்றும் ஆண்டிபட்டி தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன் நேரலைக் காட்சிகள்..தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக, ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் தொடங்கி, மார்ச் 27ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பாஜக கூட்டணியில் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அந்த வகையில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இதுவரை சுயேட்சை, அதிமுக மற்றும் நாதக கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனத் தாக்கல் செய்துள்ள நிலையில், நாளை திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளனர்.
Last Updated : Mar 26, 2024, 9:51 PM IST