தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

LIVE: தமிழ்நாடு பட்ஜெட் 2024 -2025 மதிப்பீடு: நிதித்துறை செயலாளர் செய்தியாளர்கள் சந்திப்பு - Finance Secretary

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 1:06 PM IST

Updated : Feb 19, 2024, 1:38 PM IST

சென்னை: தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பட்ஜெட் மதிப்பீடுகள் 2024-2025 (Budget Estimates 2024-2025) குறித்து தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதன் நேரலைக் காட்சிகள்

முன்னதாக, தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2024 - 2025 சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரையை 2 மணிநேரத்திற்கும் மேலாக அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு, குறு தொழில்கள், மகளிர் மேம்பாடு, இளைஞர் நலன் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ரூ.12,000 கோடியில் மெட்ரோ ரயில் சேவை, மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.13,720 கோடி, புதுப்பெண் திட்டம் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்துதல் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன. 

Last Updated : Feb 19, 2024, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details